EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடிய இராணுவ முகாம்களுக்கு ட்ரோன் அச்சுறுத்தல்: பாதுகாப்புச் சாதனங்களைக் கொள்வனவு செய்ய தீர்மானம்

கனடிய இராணுவ முகாம்களுக்கு ட்ரோன் அச்சுறுத்தல்: பாதுகாப்புச் சாதனங்களைக் கொள்வனவு செய்ய தீர்மானம்

ஐப்பசி 10, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நவீன போர்க்களங்களில் ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கனடிய இராணுவ முகாம்களுக்கு ஏற்படக்கூடிய ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை கனடாவின் தேசிய பாதுகாப்புத் திணைக்களம் (DND) முன்னெடுத்துள்ளது.

கனடாவிலுள்ள இராணுவத் தளங்கள் மற்றும் முகாம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதி பெறப்படாத ட்ரோன்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவற்றை அழிக்கும் எதிர்ப்பு சாதனங்களைக் கொள்வனவு செய்ய பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பாவில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய ஆயுதப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாக, உள்நாட்டிலுள்ள இராணுவத் தளங்களுக்கும் இத்தகைய பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து தேசிய பாதுகாப்புத் திணைக்களத்தின் பேச்சாளர் லோரா மெக்கின்டயர்-கிரில்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், நவீன பாதுகாப்பு மற்றும் திட்டமிடலில் ட்ரோன் எதிர்ப்புத் திறன்களைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு விதிவிலக்குகள் காரணமாக, கொள்வனவு செய்யப்படும் சாதனங்களின் நுணுக்கமான விபரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்க்களத்தில் ட்ரோன்களின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே கனடா இந்த முடிவை தீவிரப்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மோதல்களில் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 10 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டளவில் அது 80 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

நேட்டோ அமைப்பின் கீழ் லாட்வியாவில் பணியமர்த்தப்பட்டுள்ள கனடியப் படைகள், உக்ரைனில் இடம்பெறும் ட்ரோன் தாக்குதல் உத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கம் தனது சொந்த ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ‘ட்ரோன் பாதுகாப்பு முன்னெடுப்பு’ (DDI) என்ற பன்முகத் திட்டத்தை நடப்பாண்டில் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கனடிய ஆயுதப்படை மற்றும் கடலோரப் படைப்பிரிவுகளுக்குத் தேவையான நவீன ட்ரோன் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்வதற்கும், உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் மத்திய அரசு இலக்கு நிர்ணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எலோன் மாஸ்க்கின் பிரிவினைக் கருத்தை  நிராகரித்த முதல்வர்கள்
கனடா

எலோன் மாஸ்க்கின் பிரிவினைக் கருத்தை நிராகரித்த முதல்வர்கள்

ஐப்பசி 10, 2026
கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க ”கூட்டு ஒப்பந்தம்”
கனடா

கனடா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க ”கூட்டு ஒப்பந்தம்”

ஐப்பசி 10, 2026
நிதிசார் குற்றப் பிரிவு அமைப்பால் RCMP பொலிஸ் படை பாதிக்கப்படும்: கனடிய பொலிஸ் சங்கம்
கனடா

நிதிசார் குற்றப் பிரிவு அமைப்பால் RCMP பொலிஸ் படை பாதிக்கப்படும்: கனடிய பொலிஸ் சங்கம்

ஐப்பசி 10, 2026
கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை
கனடா

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை

ஐப்பசி 8, 2026
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது
கனடா

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது

ஐப்பசி 8, 2026
கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா

கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

3 நாட்கள் முன்னர்
ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்

காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்

2 நாட்கள் முன்னர்
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

1 நாள் முன்னர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check