நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.
குறித்த பகுதிகளில் இடி மின்னல் தாக்கம் ஏட்படும் என்பதுடன் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.











