முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாங்குளம் பிரதேச மண்டபத்தில் 2ஆம் லெப். மாலதியின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், தாயக மகளிர் தின நிகழ்வும் நேற்றையதினம்(10.10.21026) இடம்பெற்றுள்ளன.
மாவீரர்கள் மற்றும் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது, 2ஆம் லெப். மாலதியின் நினைவுகள் நினைவுகூரப்பட்டதுடன், தாயக மகளிரின் அர்ப்பணிப்புகளும் பங்களிப்புகளும் நினைவு கூரப்பட்டன.
இந்நிகழ்வில் குறித்த கிராமமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.











