மன அழுத்தம் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்சினையாகும்.
இது தற்காலிக கவலை நிலையிலிருந்து நாள்பட்ட மனச்சோர்வு வரை பல நிலைகளில் வெளிப்படக்கூடும்.
ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கான காரணங்களில் திடீர் பாதிப்புகள், குடும்ப இழப்புகள், பிரிவு மற்றும் தனிமை போன்றவை முக்கியமானவையாகும்.
மன அழுத்தம் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மனநல ஆலோசனை பெற வேண்டும் எனவும், அறிகுறிகள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தால் அது கடுமையான மனச்சோர்வாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால் அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறி மீள அதிக காலம் தேவைப்படலாம்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை தவிர்த்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உரையாடுதல், பிடித்த செயல்களில் ஈடுபடுதல், எதிர்மறை எண்ணங்களை குறைத்தல் போன்றவற்றை கடைப்பிடிப்பது மனநலத்தை மேம்படுத்த உதவும் என பரிந்துரைக்கப்படுகின்றது.











