நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது.
இதன்படி திருக்கோணமலையிலிருந்து காங்கேசன்துறை, கட்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வரையான கடற் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவித்துள்ளது.
அத்தோடு இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











