நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (25) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொதுமக்களும் இந்தச் சீரற்ற காலநிலையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.











