EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஐப்பசி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இன்றையதினம் (26) வெளியிட்ட அறிக்கையில், மூன்று முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கட்சி கோரியுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, ஞானசார தேரரின் விடுதலையைக் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா விளக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கட்சி, ஞானசார தேரர் ஏற்கனவே இந்தக் குற்றத்திற்காகப் பத்து மாதங்களுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையையும், ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பையும் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஞானசார தேரரின் விடுதலையைக் கோரிய போராட்டங்களில் பங்கேற்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டமை தொடர்பாகவும் கட்சி அரசாங்கத்தை விமர்சித்துள்ளது.

மேலும், ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுமாறு உத்தரவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், மகாநாயக்க தேரர்களின் பங்களிப்புடன் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கோரிக்கை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!

ஐப்பசி 26, 2026
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஐப்பசி 26, 2026
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை
இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை

ஐப்பசி 26, 2026
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு

ஐப்பசி 26, 2026
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஐப்பசி 26, 2026
மன்னாரில் வெள்ள அனர்த்தம் – 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் இடம்பெயர்வு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் வெள்ள அனர்த்தம் – 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் இடம்பெயர்வு!

ஐப்பசி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

6 நாட்கள் முன்னர்
மன்னார் உணவகங்களில் விசேட சோதனை

மன்னார் உணவகங்களில் விசேட சோதனை

2 நாட்கள் முன்னர்
கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

2 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check