கியூபெக் மாகாணத்தில் உள்ள பிரபல ‘நோர்டிக் ஸ்பா’ (Nordik Spa Village) நிறுவனம் தொடர்பாக பாலியல் வன்கொடுமைப் புகார்கள் எழுந்ததை அடுத்து, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 19 ஆண்டு காலப் பகுதியில் அங்கு பணியாற்றிய 36 மசாஜ் நிபுணர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அது தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ள பின்னணியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மசாஜ் நிபுணர்களும் குற்றவியல் பின்னணிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும், அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து முறையான பயிற்சி வழங்கப்படுமென்றும், அந்த ஸ்பா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்புகளுடன் அந்த நிறுவனம் நல்ல நிலையில் தொடர்ந்து இயங்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.











