கியூபெக் மாகாணத்தில் உள்ள வசோன் (Vachon) தேர்தல் தொகுதியில் நீதித்துறை மறுவாக்கு எண்ணிகைக்குப் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து, கியூபெக் லிபரல் கட்சி (PLQ) சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மாகாணத் தேர்தலில் இத்தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் செல்லாததாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சி வேட்பாளர் Affine Lwalalika ஆரம்பத்தில் 10 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
எனினும், பார்ட்டி கியூபெக்வா கட்சியின் (PQ) கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட நீதித்துறை மறுவாக்கு எண்ணிக்கையில், அந்தக் கட்சியின் வேட்பாளர் Stephan Fogaing மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, தேர்தல் ஆணையமான ‘எலெக்சன்ஸ் கியூபெக்’ (Élections Québec) உறுதிப்படுத்தியது.
தேர்தல் நாளன்று செல்லுபடியாகும் எனத் தீர்மானிக்கப்பட்ட பல வாக்குச்சீட்டுகள், நீதித்துறை மறுஎண்ணிகையின் போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக, கியூபெக் லிபரல் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் சட்ட விதிகளுக்கு மாறாக, வாக்காளர்களின் உண்மையான நோக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கியூபெக் லிபரல் கட்சித் தரப்பு கருதுகின்றமை குறிப்பிடத் தக்கது.











