ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், கள்ளப்படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையர்களை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் அழைத்து வருவதற்கு ரூ.1.10 லட்சம் வாங்கியதாகவும், தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் டெல்லி சென்று போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.











