லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, 495 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 515 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, சிபெட்கோவில் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 490 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், இரு நிறுவனங்களுக்கும் இடையில் லீற்றருக்கு 25 ரூபா விலை வித்தியாசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











