இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் திரைப்படம் தான் ” திரு மாணிக்கம் ” இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை அனன்யா நடித்துள்ளார்.
திரு மாணிக்கம் திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன் சீதா ராமம் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது.
படத்தை ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.











