‘நீண்ட கால பயிர் உற்பத்தி ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்’ எனும் திட்டத்தின் கீழ் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் 60 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு தேவையான மா,தென்னை,மற்றும் பப்பாசி உள்ளடங்களாக நீண்ட கால பயிர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் பேசாலை,வேப்பங்குளம் மற்றும் கரம்பைக்குளம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து 60 பயனாளிகள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறித்த நீண்ட கால பயிர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாலை நீண்ட கால பயிர்கள் வழங்கும் நிகழ்வு கரம்பை குளம் கிராமத்தில் இடம்பெற்றது.
கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் கலந்து கொண்டார்.
மேலும் தேசிய நிலையத்தில் இருந்து திட்டத்தின் பொறுப்பாளர்களான சோபா ,மற்றும் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டதோடு, முருங்கன் மெதடிஸ் போதகரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நீண்ட கால பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, விருந்தினர்களினால் நடுகை செய்யப்பட்டது.
இத்திட்டமானது ஜேர்மன் நாட்டில் உள்ள மிசிரியோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் கொழும்பு தேசிய நிலையத்தின் ஊடாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் இத்திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.