28 வருடங்களின் பின்னர் விசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (19.06.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகமானது 28 ஆண்டுகளின் பின்னர் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக கிரியைகள் 13.06.2024 அதிகாலை 05.15 க்கு ஆரம்பமாகி நேற்று (18.06.2024) எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெற்று இன்று கும்பாபிஷேகமானது காலை 06.10 – 06.53 வரையுள்ள சுபவேளையில் நடைபெற்று முடிந்துள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்ட சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை மிக சிறப்பான முறையில் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசத்தில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக கிரியைகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.