மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வங்குமாறு கோரி தீர்வு கிடைக்கும் வரை தொடர்போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (2) காந்தி பூங்காவில் தொடர் போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து காந்தி பூங்காவில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றினைந்தனர்.
இதன்போது பல்கலைக்கழக்திற்கு தெரிவு செய்து எம்மை ஏமாற்றாதே, கல்விகொடுத்த அரசே கொள்ளி வைக்கலாமா, நாங்கள் பட்டம் முடித்து வேலையின்றி இறப்பதா? பட்டதாரிகள் வீதியில் நின்றால் நாடு எப்படி உருப்படும், வேண்டும் வேண்டும் வேலை வேண்டும். என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தை ஆரம்பித்து வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரைக்கும் இந்த இடத்தில் போராடப் போவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.