EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் மாயம்.

ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் மாயம்.

ஆவணி 1, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியதில் படகில் இருந்த நான்கு மீனவர்கள் மாயமானதால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நேற்று நள்ளிரவு விசைப்படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை ரோந்து படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததால் கைது செய்யப்படும் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவரின் விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மீன் பிடி படகு நடுக்கடலில் மீனவர்களுடன் மூழ்கியதாக சொல்லப்படுகிறது.

இதில் படகில் இருந்த மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமாகினர். மேலும் நான்கு மீனவர்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அச்சமடைந்த படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும் படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் நான்கு மீனவர்கள் மாயமான நிகழ்வு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலகம்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

ஆவணி 18, 2026
காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

க்ளீன் ஐலண்ட்  திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

4 நாட்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

18 மணத்தியாலங்கள் முன்னர்
காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

13 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In