இவ்வாண்டு தரம் _05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்று இன்று (06) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
லைக்கா ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் பூரண ஆதரவுடன் இடம்பெறும் குறித்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒன்று வழங்கப்பட்டு மாணவர்களை பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் வகையில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்று வருகிறது.
குறித்த கருத்தரங்கின் வளவாளர்களாக ஆசிரியர்களான ஆனந்தவேல் மதிரூபன் மற்றும் கணேஸ்வரராசா தயாராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன் முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முத்துவிநாயகர் தமிழ் வித்தியாலயம், பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம், பேராறு தமிழ் வித்தியாலயம், ஈஸ்வரன் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த சுமார் 75 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.