தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை ஆதரித்து இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை – தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து தேங்காய் உடைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலய பிரத குரு அவர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண மீனவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தேர்தல் பிரசாரத்தில் அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா, யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம், மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.