கொழும்பு-கண்டி பிரதான வீதியின் இம்புல் கொட பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பேருந்து கடவத்தை நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதன் போது குறித்த நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.வாக்குவாதம் முற்றியதில் சந்தேக நபர் சாரதியை எட்டி உதைத்ததாகவும்,இதன் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருந்து கவிழ்ந்த போது பேருந்தில் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதியும்,தாக்குதலை மேற்கொண்ட நபரும் சிகிச்சைக்காக கம்பஹா போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் யக்கலை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











