நாட்டின் மத்திய பகுதியில் கன மழை பெய்து வருவதால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கண்டி, பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதுடன், இவ் வான்கதவுகள் ஊடாக வினாடிக்கு 21000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திட்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் அதீத மழை பெய்யும் வேளையில் பொல்கொல்ல அணைக்கு கீழ் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.











