ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றத்தில் இருந்து பலவேறு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுவருகிறது அந்த வகையில் இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.