மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் இன்று (30) விடிய காலை புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு செய்து சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சென்றவேளை குறித்த சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொலிஸார் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் நான்கு சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களையும் பின்னர் கைது செய்துள்ளனர்.











