நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று (14) இடம்பெற்றது.
இன்று முல்லைத்தீவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான வின்சன் டிப்போல் அருள்நாதன், அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், சின்னத்துரை கலாநிதி கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.