இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் கெளரவ எரிக் வோல்ஸ் (Eric Wals) அவர்கள் இன்றைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார்.
இதன் போது அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரினால் கனடா உயர்ஸ்தானிகருக்கு விபரிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களும் மாவட்ட தொழில்துறை அமைப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.











