யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள்ல்த் தலைவர் கிருஸ்ணமீனன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.
70வருட அரசியலில் கதிரைகளை தக்க வைகும் முயற்சியிலேயே முன்னைய தமிழ் அரசியல் வாதிகள் ஈடுபட்டு வந்தார்கள்.
அடுத்த வருடம் நடக்கும் இந்த வருடம் முடிவுக்கு வரும் என்று மக்களை ஏமாற்றியே்வந்துள்ளனரே தவிர மக்களுக்காக எதையும் சாதிக்கவில்லை. அதனாலேயே இளையவர்கள் நாங்கள் களமிறங்கியுள்ளோம்.
கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தனித்துத் தனித்தே எல்லாக் கட்சிகளும் நினைவேந்தினர். பல்கலைக்கழக மாணவர்களாக இளைஞர்களாக நாமே அவர்களை ஒன்று திரட்டினோம் என தெரிவித்தார்.