எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9:30 மணியளவில் யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











