கேகாலை, தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் வெளிநாடு செல்வதற்குத் தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று இந்த இளைஞன் தனது 27ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் இணைந்து தெலி எல்ல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இதன்போது இந்த இளைஞன் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ள நிலையில் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.இதனையடுத்து, பிரதேசவாசிகள் சிலர் இணைந்து காணாமல் போன இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வைத்து இளைஞனின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.