EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மனை டிசம்பர் 4ஆம் திகதிக்கு பின்னரே சுதந்திரமாக வழிபட முடியும்.

பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மனை டிசம்பர் 4ஆம் திகதிக்கு பின்னரே சுதந்திரமாக வழிபட முடியும்.

கார்த்திகை 22, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில் , மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.

அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று , விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், , பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையிலையே கடந்த திங்கட்கிழமை முதல் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திற்கு தினமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்னர்.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பாம்புக்கடிக்கு இலக்கான  இளைஞன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்
கச்சதீவு திருவிழா

கச்சதீவு திருவிழா

6 நாட்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

1 நாள் முன்னர்
எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In