EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுகின்றன.

கார்த்திகை 23, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா. வேதநாயகன் ,

வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றவேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை வழங்காமல் விடவேண்டாம். காணிகளை அவர்களுக்கு கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை நாங்கள் முன்னெடுப்போம். கடந்த காலங்களைப்போன்று பனைசார் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். குறிப்பாக சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதைப்போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிக்கவேண்டும், என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளை உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி வரியாகவும் அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளன.

அதேபோன்று 2 தனியார் நிறுவனங்கள், பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து போத்தல் கள்ளை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக பல லட்சம் டொலரை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளன. கூட்டுறவுத் திணைக்களம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சங்கங்களுக்கு 6 சதவீத வட்டிக்கு கடனை வழங்குகின்றன.

அதனை அவர்கள் மக்களுக்கு ஆகக்கூடியது 15 சதவீதம் வரைக்கும் வழங்க முடியும். ஆனால் வடக்கில் சில சங்கங்கள் வேறு சமாசங்களிடமிருந்து 15 சதவீத வட்டிக்கு கடனைப் பெற்று அவற்றை மக்களுக்கு 21 சதவீதம் வரைக்கும் வழங்குகின்றன.

இது வடக்கு கூட்டுறவுத்துறைக்கு சவாலாக இருக்கின்றது, என்றார். இதன்போது வடக்கு ஆளுநர், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, திணைக்களத்தின் பல்வேறு வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் பணிப்பாளர், தம்மிடம் பல்வேறு உதவிகளைக்கோரி மக்கள் வருவதாகவும், ஆனால் தமது எல்லைக்குட்பட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறானவர்களுக்கு நன்கொடையாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உதவிகளைச் செய்யமுடியும் எனவும் அவ்வாறு உதவிகோரி வருபவர்களின் விவரங்களை வழங்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், நலனோம்பு மன்றம் (welfare forum) ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்ததுடன் அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

5 நாட்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

5 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

1 நாள் முன்னர்
கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

1 நாள் முன்னர்
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In