வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் வவுனியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியாவில் பல குளங்கள் நிறைந்துள்ளன. அந்தவகையில் பேராறு நீர்ததேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையினாலேயே வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் இதற்கு கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஓமந்தை, பாலமோட்டையில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் அணைக்கட்டில் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் நிலம் நீரால் சூழப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும் இதனை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கையினை கமக்கார அமைப்பு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.