EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
56 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜனாதிபதி அநுர.

56 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜனாதிபதி அநுர.

கார்த்திகை 24, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake ) இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார்.

அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேக மத்திய கல்லூரியிலும் கற்றார்.

தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார்.

2000இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

பின்னர் செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.

2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.

2019 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

2 நாட்கள் முன்னர்
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

6 நாட்கள் முன்னர்
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In