கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது. தீப்பரவலை அடுத்து அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.