EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி – ட்ரம்ப்!

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி – ட்ரம்ப்!

மாசி 11, 2025
வகை: உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.

ஆனால், தற்போது திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையன்று (பிப்.10 அல்லது பிப்.11) இரும்பு, அலுமினியம் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விதிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ளார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படக் கூடும் என்று ட்ரம்ப் ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

புளோரிடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு செல்லும் வழியில் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன்றில் இருந்தபடி அவர் அளித்தப் பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார்.

“அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் உயர்ந்த வரியை விதித்தால் அமெரிக்காவும் அதிக இறக்குமதி வரி விதிக்கும். சில நாடுகள் நமது பொருட்களுக்கு 130 சதவீதம் வரி விதிக்கின்றன. அவர்களுக்கு நாம் பதில்வரி விதிக்காவிட்டால் அது நியாயமானதாக இருக்காது அல்லவா?. இறக்குமதி வரிகள், அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வருவாய் ஆதாரமாக இருக்கும். எனவே அமெரிக்காவுக்குள் வரும் இரும்பு, அலுமினியத்துக்கு தலா 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பு பெப்ரவரி.10 அல்லது 11-ல் வெளியாகும். ஒரு பக்கம் வரி அதிகம், மறு பக்கம் வரி குறைவு என்ற போக்கெல்லாம் வேண்டாம். அவர்கள் வரி விதித்தால் நாமும் வரி விதிப்போம்.” என்றார்.

ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும், இறக்குமதி வரிவிதிப்புகளால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த முறை வரி விதிப்புகள் கடுமையை காட்டி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை
கனடா

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

வைகாசி 20, 2025
விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

வைகாசி 20, 2025
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதம மந்திரி கார்ணி  அறிக்கை
கனடா

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதம மந்திரி கார்ணி அறிக்கை

வைகாசி 18, 2025
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

வைகாசி 18, 2025
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு
அண்மைய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

வைகாசி 18, 2025
போர் முடிவுற்று  16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று
இலங்கை

போர் முடிவுற்று 16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று

வைகாசி 18, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

7 நாட்கள் முன்னர்
Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும் !

Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும் !

6 நாட்கள் முன்னர்
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

4 நாட்கள் முன்னர்
சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

18 மணத்தியாலங்கள் முன்னர்
வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In