ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காணொளி மூலம் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் தலைமையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஒன்று கூடி இணைந்து கொண்டனர்.
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஆற்றப்பட்ட உரை காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு விழிப்பூட்டல் காணொளியும், ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரித்தல் மற்றும் அதன் முக்கிய பிரிவுகளை சுருக்கமாக விபரிக்கும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை (2025 – 2029) உத்தியோக பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் நேரடியாக சகல மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் பங்குபற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.