யாழ்ப்பாணம் மட்டுவிலில் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தினை கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட குழாம் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோர் அமைச்சருடன் சென்று பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன் , அதனை மீள இயக்குவது குறித்தும் ஆராய்ந்தனர்.