நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்துள்ளதுடன், 19 மரணங்கள் பதிவாகியுள்ளது.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலே டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.











