மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையமான ARTM (Autorité régionale de transport métropolitain), 2026-2027 நிதியாண்டுக்கான புதிய கட்டண அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துச் சேவை வலையமைப்புகளின் கட்டணங்கள் சராசரியாக 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த கட்டண மாற்றத்தால், வழக்கமான மாதாந்திர பாஸ் கட்டணம் 5.50 டொலர்களாலும், சலுகை விலையிலான மாதாந்திர பாஸ் கட்டணம் 3.25 டொலர்களாலும் அதிகரிக்கின்றன.
அதேவேளை, எப்போதாவது பயணிக்கும் பயணிகளுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒற்றைப் பயணம் (Single-fare) மற்றும் இரண்டு முறை பயணிக்கும் (Two-trip) டிக்கெட் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கட்டண உயர்வு, தினசரி மற்றும் வாராந்திரப் பயணிகளை நேரடியாகப் பாதிக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது.











