இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தற்போது புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்றையதினம் கையளிக்கப்பட்டது.











