வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,342 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த பேரிடரில் 16,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் போன உறவினர்களைத் தேடி குடும்பத்தினரும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.











