கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நள்ளிரவு (17-07-2026 ) 1.00மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்திலிருந்து புகை எழுந்த நிலையில் காவலாளியால் சங்க பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது பணியாளர்களினால் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
வளிச்சீராக்கி, நிழற்பட பிரதி உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











