ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுகளில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையங்களை சுற்றியுள்ள உடைந்த பாத்திரங்கள், பாவனையற்ற டயர்கள், சிரட்டைகள், யோகர்ட் கப் என நீர் தேங்கி நிட்கும் வகையிலான பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (21) நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற அரையாண்டு பொலிஸ் பரிசோதனையின்போது, நிலையத்தை ஆய்வு செய்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு சுத்தம் செய்து ஒழிக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு நிலையப் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் கபில விஜேரத்னவுக்கு பணிப்புரை வழங்கினார்.











