EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல்  வில் – எமார்ட்  பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

மொன்றியல் வில் – எமார்ட் பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆடி 31, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் உள்ள வில்-எமார்ட் (Ville-Émard) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் தீவிர காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவத்தை ஆண்டின் 13ஆவது கொலைச் சம்பவமாகப் பதிவுசெய்துள்ள மொன்றியால் பொலிஸார் (SPVM), தப்பிச் சென்ற சந்தேகநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) பெருநகரப் பிரிவுக்குட்பட்ட மங்க் வீதி (Monk Boulevard) மற்றும் பியர்-ஹெரூக்ஸ் வீதி (Pierre-Héroux Street) சந்திப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் காணப்படுவதாக, மொன்றியல் பொலிஸாருக்குப் அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 42 வயது நபரை மீட்டனர்.

அவசர மருத்துவப் பிரிவினரால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, தெளிவற்ற காரணங்களுக்காகப் பாதிக்கப்பட்ட நபர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர் என, மொன்றியால் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஜோஹானி சார்லண்ட் (Johany Charland) தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் இடம்பெற்ற பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கொலைக் குற்றப் பிரிவு  அதிகாரிகளின் உதவியுடன் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வசாவிளான் பகுதி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

வசாவிளான் பகுதி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 3, 2026
மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே
கனடா

மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே

ஆவணி 2, 2026
கனடாவில் சோயா பதப்படுத்தலுக்கான புதிய முயற்சி
கனடா

கனடாவில் சோயா பதப்படுத்தலுக்கான புதிய முயற்சி

ஆவணி 1, 2026
’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்
அண்மைய செய்திகள்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

ஆவணி 1, 2026
கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு
அண்மைய செய்திகள்

கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

ஆவணி 1, 2026
‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்
அண்மைய செய்திகள்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

ஆவணி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

2 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

யாழில். மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

5 நாட்கள் முன்னர்
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In