கனடாவில் விளையும் சோயாபீன்களை உள்நாட்டிலேயே பதப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் உணவுத் தன்னிறைவையும் வலுப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் New Protein International நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஒன்டாரியோ மாநிலத்தின் பென்மில்லர் பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் சோதனை உற்பத்தி நிலையத்தில் மார்ட்டின் வாண்டர்லூ மற்றும் கிரஹாம் மார்க்ஹம் ஆகியோர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டன் சோயாபீன்கள் விளைவிக்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை மூலப்பொருளாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், குழந்தைகளுக்கான பால் கலவைகள், புரதப் பார்கள் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சோயா புரத தனிமத்தை (Soy Protein Isolate) கனடாவிலேயே உற்பத்தி செய்வதே New Protein International நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் நாட்டில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இறக்குமதியிலான சார்பு குறைந்து கனடாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுத் தன்னிறைவு மேலும் வலுப்பெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.











