EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
காணிகளை விடுவிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

ஆடி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய கூட்டுறவுப் பிரதியமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது. இருப்பினும், பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய விடயங்கள் உள்ளன.

இவை குறித்தும் கவனம் செலுத்தி, மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குரிய காணிகளை மீள வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன், நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில், தற்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அவர்கள் இங்கு படைப்பிரிவுத் தளபதியாக பணியாற்றினார்.

அன்றைய காலகட்டத்தில் மீள்குடியமர்வுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூருகின்றேன். அன்று அவருடன் கலந்துரையாடி மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்பைச் சாத்தியமாக்கியிருந்தோம். தற்போதும் இத்தகைய கலந்துரையாடல்கள் ஊடாகக் காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றேன்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் மக்களின் கோரிக்கைகள் ஆகிய இரண்டும் இரு வேறு முக்கிய முனைகளாகும். இவ்விரண்டுக்கும் இடையே சீரான சமநிலையைப் பேணி நாம் தீர்வை எட்ட வேண்டியுள்ளது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். எனவே, நாம் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடிச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும், எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர்.

போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவ முகாமின் வேலியை 10 மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைச் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்
அண்மைய செய்திகள்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

ஆவணி 1, 2026
இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்

ஆடி 31, 2026
Colomboபூஜித் ஜயசுந்தர,  ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.
இலங்கை

Colomboபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.

ஆடி 31, 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
அண்மைய செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஆடி 31, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு
அண்மைய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு

ஆடி 31, 2026
புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

ஆடி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

4 நாட்கள் முன்னர்
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

6 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

யாழில். மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In