வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’ முன்னிட்டு மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்த பிரம்மாண்ட நடைபயணமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.
கல்லூரி முன்றலில் ஆரம்பமான இந்நடைபயணம், நகரத்தின் முக்கிய வர்த்தகப் பகுதியான பஜார் வீதி வழியாகச் சென்று, வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் கல்லூரியைச் சென்றடைந்தது.
நடைபயணம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன.
இதில் பழைய மாணவர்கள்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளையும் அணி ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் வழிகாட்டி வரும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











