EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

ஆடி 31, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

எங்களுடன் பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39 ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள் அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும் எங்களோடு பேசுவதற்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.

எங்களுடைய பேச்சை கேட்டார்கள். எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளை கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார். இந்த அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த அரசுக்கு சாதகமாக செயட்படுகின்றாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. தமது பதவிகளை தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துவது உண்மையிலேயே மனதில் வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து வலிகளோடுதான் இருக்கிறோம். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர் படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி கூறினார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி அமைச்சர் தயாராகவில்லை.

அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்கின்ற அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது.

எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும்.

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை அழைத்து செயலமர்வு நடக்கிறது,

உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும். ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட, முனைந்துள்ளார்களே தவிர, ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம் தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்
அண்மைய செய்திகள்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

ஆவணி 1, 2026
இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்

ஆடி 31, 2026
Colomboபூஜித் ஜயசுந்தர,  ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.
இலங்கை

Colomboபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.

ஆடி 31, 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
அண்மைய செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஆடி 31, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு
அண்மைய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை விதிப்பு

ஆடி 31, 2026
புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

புளியங்குளத்தில் பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

ஆடி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

4 நாட்கள் முன்னர்
டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

4 நாட்கள் முன்னர்
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

5 நாட்கள் முன்னர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In