EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

ஆடி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை மன்னாரிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.

மன்னாரிலுள்ள (மெசிடோ) நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆழ்ந்த ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

மேலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு, இளைஞர்களின் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சிவில் சமூக பிரதி நிதிகளால் முன்வைக்கப்பட்டன.

பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள், களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.

அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில் சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!
அண்மைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆடி 27, 2026
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
அண்மைய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
பொதுமக்கள்  முழுமையான ஒத்துழைப்பை எமக்கு  வழங்க  வேண்டும் –  ஜெகதீஸ்வரன் மயூரன்

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

3 நாட்கள் முன்னர்
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

5 நாட்கள் முன்னர்
நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

5 நாட்கள் முன்னர்
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In