மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (31) அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்து நெத்தி தலைமையில் பழைய கச்சேரி மண்டபத்தில் நடைபெற்றது இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட பெறுமதியான வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்க பட்டிருந்தது அது தொடர்ச்சியான மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது
அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பாக அவர்கள் எதிர்பார்க்கின்ற 3 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.
அதேபோன்று மழை வெள்ளம் ஏற்படும் காலத்தில் போக்குவரத்து தடை ஏற்படும் கிரான் பொண்டுகள்சேனை பாலங்கள் நிர்மாணிப்பதற்காக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடவடிக்கை தொடர்பாகவும்.
மாவட்டம் வாவிகள் நிறைந்த மாவட்டம் படுவான் கரைக்கும் எழுவான் கரைக்கும் இடையிலான மண்டூர் பாலம், பழுகாமம் மற்றும் வெல்லாவெளிக்கான பாலம் மற்றும் வீதிகள் அமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான ஆய்வு அறிக்கைகளையும் செலவாகின்ற நிதி தொடர்பான அறிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மற்றும் யானை மனித மோதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது அதனை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் குடிநீர் தொடர்பான பிரச்சனை தீர்ப்பதற்கு கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாக அதற்கு கோரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அதேவேளை வாகனேரி குளத்தின் நீரின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளியில் உள்ள கிந்துரு குளத்தில் இருந்து நீரை பெற்றுக் கொண்டு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள நீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றோம்.
ஆகவே மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஆரம்பகட்ட திட்டங்களை ஒருங்கமைத்துள்ளோம். அதேபோன்று ஜனாதிபதியின் ஊடான கலந்துரையாடலில் குடிநீர் பிரச்சனைகளை முன்னெடுத்து வருகிறோம்
உயர்நீதிமன்ற நீதிபதிகளை வயதெல்லைகள் அதிகரிப்பு தொடர்பாக பேசும் பொருளாக இருந்து வருகின்றது கடந்த காலங்களில் உயர் நீதிபதிகளின் வயதெல்லை தொடர்பாகவும் அதனை தாண்டி கடந்த காலங்களில் இருக்கின்ற உயர் நீதிபதிகள் தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டுக் கொண்டனர்.
இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல போல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்க கூடியதாக இருக்கின்றது.
கூட்டுச் சேர மாட்டோம் என்பவர்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு இன்று இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது இதில் இந்த சங்கத்தினர் இணைந்துள்ளனர் இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்கள் விடுவித்து கொண்டு தப்பிக் கொள்வதற்காக முயற்சியை மேற்கொள்கின்றனர்.
ஒரு நீதி விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீண்ட காலம் எடுக்கும் விசாரணை இறுதி கட்டம் அடையும் போது இந்த நீதிபதியை மாற்றி இன்னும் ஒரு நீதிபதியை நியமிப்பதன் ஊடாக அந்த விசாரணை மீண்டும் மீள் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலமை இருக்கின்றது
அதனால் காலம் வீணடிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பா விசாரணை கூட தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்த விசாரணை இன்னமும் முடிவடைகின்ற நிலமை இல்லாத நிலை ஏற்படுகிறது எனவே இலங்கையில் நீதி துறையை சரியான கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது நிலுவையில் உள்ள விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை நீதி கட்டமைப்புக்குள் கொண்டுவந்து அவர்களுக்கான தண்டனையே விடுவிப்பே எதே ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம்.
இது தொடர்பாக இவர்கள் என்ன குழப்ப நிலை செய்திருந்தாலும் இறுதியில் மக்கள் நலன் சார்ந்ததாக நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கின்றது என்றார்.











