EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆவணி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 100 நாட்களைத் தாண்டி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால் இதுவரை இல்லை.

முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது. அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும் நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக் குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்
அண்மைய செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

ஆவணி 10, 2026
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!
அண்மைய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

ஆவணி 10, 2026
மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்
இலங்கை

மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 59 தடுப்பு வலைத் தொகுதிகள்

ஆவணி 10, 2026
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்
அண்மைய செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

ஆவணி 10, 2026
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா
இலங்கை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

ஆவணி 10, 2026
செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

3 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In