இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேல் மாகாணம் அதி அபாய நிலையை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்[ஆட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,011 ஆகா உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
29,968 என்ற அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 6,671 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.











